Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு…. கலந்தாய்வு தேதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்டவை அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. முதுநிலை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 980 தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி ஆணையம் இந்த பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.

அதாவது அரசு பள்ளி இடைநிலை, முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு குறித்து ஆலோசிக்க பள்ளிக்கல்வி ஆணையம் கலந்தாய்வு ஒன்றை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது. அதன்படி முதுநிலை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று முதல் வருகின்ற 16-ஆம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |