Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸா?…. விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

மத்திய மாநில அரசு துறைகளில் பணி புரிபவர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் முதல்வர் முக ஸ்டாலின் அகவிலைப்படி குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தகுதி உள்ள குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு 17 % இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்குவதாகவும், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தை பொங்கலையொட்டி போனஸ் ரூ.3000 வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இந்த அறிக்கை தொடர்பாக மதுரையில் அரசு சங்க ஊழியர்கள் சார்பில் முக்கியமான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசானது 01/07/2021 முதல் 31% அகவிலைப்படியை ரொக்கமாக கொடுத்து வருகிறது.

மேலும் மத்திய அரசானது கடந்த 01/01/2020 முதல் கொடுக்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை டிசம்பர் 2021 சம்பளத்துடன் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழக அரசு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகையை 2020 ஜன 1 முதல் வழங்கவேண்டும் என்று மதுரையில் அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளனர். அதன்பின் போனஸ் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் 7000 ரூ வரை போனஸ் பெற்று வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு ரூ.3000 மட்டுமே வழங்கி வருவதாகவும், எனவே தமிழக அரசு போனைஸை ரூ.7000 வரை உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த வகையில் பொங்கல் தினத்தையொட்டி கருணைத் தொகையாக A மற்றும் B பிரிவினர், கிராம ஊராட்சி தூய்மை காவலர்கள் ஆகியோர்க்கு வழங்க வேண்டும் என்று உடனிருந்த நிர்வாகிகள் கோரியுள்ளனர்.

Categories

Tech |