Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. புத்தாண்டு முதல் அமல்… சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு கூட்டுறவு ஊழியர்களுக்கு ஊதிய நிர்ணயம் கடந்த 2016 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் ஊதிய நிர்ணயம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படும். அதனைப்போலவே தற்போது ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் ஊதிய உயர்வு 7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஊதிய நிர்ணயம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில் ரேஷன் கடைகள், பெரிய பல்பொருள் அங்காடிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதில் பணியாற்றும் எழுத்தர், பண்டகசாலை செயலர் , காசாளர், கணக்கர் உள்ளிட்டோருக்கு கூட்டுறவுத்துறை ஊதியத்தை அதிகரித்து வழங்க உள்ளது. லாபத்தில் இயங்கி வரும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 7 சதவீதம், தொடர்ந்து நஷ்டத்தில் செயல்படும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 3 சதவீதமும், நஷ்டத்தில் செயல்பட்டு 2021 ஆம் ஆண்டில் லாபம் பெற்ற சங்கங்களுக்கு 5 சதவீதமும் சம்பளத்தை அதிகம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வீட்டு வாடகை படி, பயணப்படி மற்றும் மருத்துவப்படி போன்றவை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |