Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெற்று வந்தனர். ஆனால் கடந்த மே மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாளர்கள் உதவி அவசியம் என்பதாலும், தமிழகத்தில் தொற்றுகளால் நிதி நெருக்கடி நிலவுவதாலும் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசு நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்தது. அரசின் இந்த புதிய அறிவிப்பால் இளைஞர்கள் வேலை இல்லாமல் சிரமப்படுவார்கள்.

ஏற்கனவே தமிழகத்தில் ஏராளமானோர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது இளைஞர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும். எனவே ஓய்வு பெறும் வயதை உயர்த்தி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்தது. தற்போது திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 58 ஆக குறைக்க பரிசீலனை செய்து வருவதாகவும், ஓய்வூதிய பணத்திற்கு பதிலாக உத்திரவாதம் அளிக்க அதிகாரிகள் கலந்தாலோசித்து வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கருத்துகளை கேட்டறிந்த பின்னர், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறைப்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபையில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |