இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடம் தோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு தகுந்தார் போல அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா தொற்று பரவல் குறைந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 11 சதவீதமாக உயர்த்தப்பட்டு மொத்தம் 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. அதன்படி தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் திமுகவினர் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அகவிலைப்படி வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதன்படி அவர்கள் ஆட்சிக்குப வந்தவுடன் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் தமிழக அரசு 11 சதவிகிதத்திலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 33 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ள னர் இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் மேலும் அதிகாரிகள் அரசு தனது நன்றியை அரசுக்குத் தெரிவித்து வருகின்றனர் இது உங்கள் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தமிழக அரசு அகவிலைப்படி நிலுவை 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது மேலும் பொதுத்துறை ஊழியர்கள் போல தங்களுக்கும் 7 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.