கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு குழு அச்சுறுத்தல் காரணமாக ஊழியர்களை 50% பேர் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அலுவலகம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
தற்போது அதிகரித்துவரும் தொற்றால் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒருவித அச்சத்துடன் பணிக்கு சென்று வருகின்றனர். அதனால் அவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் அரசு பணியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களின் உடல்நலம் பாதுகாக்கப்படும் மற்றும் பிற அரசு ஊழியர்களை தொற்று பாதிப்பிலிருந்து தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.