Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?… அரசின் முடிவு என்ன?… வெளியான தகவல்….!!!

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்படி 17% வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி தற்போது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அகவிலைப்படி உயர்வு கூட்டுறவு சங்கங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கூட்டுறவு சங்கத்தினர் அகவிலைப்படி உயர்வு தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் நியாய விலை கடை ஊழியர்கள் முதலமைச்சர் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர்களுக்கு மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு 114 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 100 சதவிகிதம் ஊதியத்தில் இணைத்துவிட்டு மீதமுள்ள 14 சதவீத அகவிலைபடியாக வழங்கலாம் என முடிவு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும் போது கூட்டுறவு தொழிலாளர்களுக்கும் வழங்கலாம் என அரசு குறிப்பிடவில்லை. அதிமுக ஏற்கனவே செய்த இந்த குழப்பத்தை சுட்டிக்காட்டி விரைந்து அகவிலைப்படி வழங்க வேண்டுமெனவும் நிலுவை தொகையும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Categories

Tech |