Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு விடுமுறை…. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!!

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து மீளமுடியாமல் வல்லரசு நாடுகள் திணறி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் உருமாறிய வைரஸ் அதிகரித்திருப்பதால் கொரோனாவிலிருந்து மீளமுடியாமல் மாநில அரசுகள் தவித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.

அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு தொற்றுநோய் குணமடையும் வரை 14 நாட்கள் ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு இந்த விடுமுறை குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் மற்றும் சிகிச்சை பெற்ற நாட்கள் முழுமைக்கும் மருத்துவ சான்றிதழின் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்தால் அதற்கு உரிய அறிவிப்பினை சமர்ப்பித்து சிறப்பு தற்செயல் விடுப்பாக தடைசெய்யப்பட்ட நாட்களை வழங்கலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இனி அரசு ஊழியர்களுக்கு கொரோனா சிறப்பு விடுமுறை 14 நாட்கள் தான் என்ற வரையறை கிடையாது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடையும் வரை அவர்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |