Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…..!!!!

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 2022-23 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியாகி வருகிறது. சமீபத்தில் ராஜஸ்தானில் மாநில சட்டப்பேரவையில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் அனைத்து ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு அடுத்த வருடம் முதல் ஓய்வூதிய திட்டத்துக்கு உரிமை உண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வறிவிப்பை மையமாக கொண்டு தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியம் திட்டத்தினை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் 2004 ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1968 முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசால் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அத்துடன் மாதம் ஓய்வூதிய தொகை ரூபாய் 20 என்று தொடங்கப்பட்டது. எனினும் அரசு ஊழியர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பின் ஓய்வூதியம் தொகை உயர்த்தப்பட்டது.

அதன்பின் உச்சநீதிமன்ற தீர்ப்புகள், பல்வேறு போராட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பெற்று வந்த ஓய்வூதியம் 2004 முதல் நிறுத்தப்பட்டு பங்களிப்பு ஓய்வூதியம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தின் அடிப்படையில் யாருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி ஏப்ரல் 1, 2004 முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் நலன் மற்றும் அரசின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிறது. ஆகவே தமிழகத்தில் பழைய ஓய்வூதியம் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என்று அந்த கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |