அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்குவதை பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் முழுமையாக இன்னும் குறையவில்லை. இருந்தாலும் தமிழ்நாடு அரசு கொரோனாவின் பாதிப்பை குறைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து முக கவசம் அணிதல், சமூக இடைவெளி, தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.இதன் மூலம் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், பொதுமக்கள் விழிப்போடு இருக்கவேண்டும் எனவும் அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் இக்கால கட்டத்திலும் பொதுமக்களுக்காக செய்யும் பணிகளில் எந்தவித தடைகளும் ஏற்படாதவாறு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு ஊழியர்கள் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது தொடர்பாக காரைக்குடியை சேர்ந்த செந்தில் குமரன் என்பவர், அரசு ஊழியர் ஒருவர் கொரோனவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு விடுப்பு வழங்குவதை பற்றி அரசிடம் கேள்வி எழுப்பி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.இதுதொடர்பாக அரசின் மனிதவள மேலாண்மை துறை கூடுதல் செயலாளரான (பொறுப்பு) அகிலா இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அதில் மருத்துவரின் ஆலோசனைப்படி ஒரு அரசு ஊழியர் கொரோனா தொற்றின் காரணத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், சிகிச்சை பெற்ற நாட்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் போன்றவற்றுக்கு மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுப்பாக அனுமதிக்கபடுவதாகக் கூறியுள்ளார். மேலும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள தடைசெய்யப்பட்ட இடங்களில் இருந்தால், அதற்குரிய அறிவிப்பை சமர்ப்பித்து அதற்கான தடைசெய்யப்பட்ட நாட்களுக்கு, சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.