தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா குறைந்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த போதும் அரசு ஊழியர்கள் பொது மக்களுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளில் எந்தவிதமான தடைகளை ஏற்படுத்தாத வண்ணம் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அரசு ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைக்குடியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு விடுப்பு வழங்க தொடர்பாக தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவுக்கு பதிலளிக்க அரசின் மனிதவள மேலாண்மை துறை கூடுதல் செயலாளர் அகிலா ஒரு அரசு ஊழியர் நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் சிகிச்சை பெற்ற நாட்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முழுமைக்கும் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படும்.
மேலும் நோய் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்தால் அதற்குரிய அறிவிப்பினை சமர்ப்பித்து தடை செய்யப்பட்ட நாட்களை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் எனவும் கூறியுள்ளார்.