Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் சலுகை?…. விரைவில் வெளியாகும் அசத்தல் அறிவிப்பு….!!!!

போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

1198 ஆம் ஆண்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் என்னும் ஒரு அருமையான திட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் திடீரென 2003 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. 2003 பிறகு பணியில் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்களுக்கு  கோரிக்கை விடப்பட்டிருந்தது. இதன் பின்பு மீண்டும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்து 10 மாதங்களாகியும் இதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.  இந்த சூழலில் தமிழக முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வுகால சம்பளத்தை வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியுள்ளார்.  தொழிலாளர் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, வைப்பு தொகை ஏதும் வழங்கப்படாமல் இழுத்துக்கொண்டிருப்பதாகவும்  கொண்டிருப்பதாகவும். இதன் காரணமாக ஓய்வு பெற்ற ஊழியர்கள் தகுந்த வருவாய் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் உடனடியாக ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |