அரசு ஊழியர்களுக்கு சட்டமன்ற குழு ஒன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இதனால் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வந்தது. இந்த நிலையில் சட்டமன்ற குழு மூலமாக மாவட்ட வாரியாக பொதுமக்களின் மனுக்களை பெற்று அதனை ஆய்வு செய்து குறைகளை நிறைவேற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பரிசீலனை செய்து மக்களிடையே நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகின்றது.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் நேற்று சட்டமன்ற குழு சார்பாக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமை கொறடா கோவி செழியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் கொறடா கோவி செழியன் பேசியதாவது: ‘மாவட்ட வாரியாக பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது. அந்த மனுக்களில் உள்ள பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது வரை நெல்லை மாவட்டத்தில் 263 மனுக்கள் பெறப்பட்டுள்ளன, அதில் 74 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 62 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஏழு மனுகளை மீண்டும் பரிசீலனை மேற்கொண்டு தீர்வுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் புகார் மனுக்கள் மீது நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் இருந்தால் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று சட்டமன்ற மனுக்கள் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பல அரசு ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.