Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு…!!!!

2022-23 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதில் குறைந்த பலனே உள்ளதால் அதனை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக  போர்க்குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையில் அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல் அமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு 2022 – 23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான சத்தீஸ்கரிலும்  கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய  திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் 2022-2023 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் வரும் 18ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. காகிதமில்லா பட்ஜெட்டை  நிதித்துறை அமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். அப்போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |