Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் மார்ச் 28, 29ம் தேதிகளில் பணிக்கு வராத தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று தலைமைச் செயலர் இறையன்பு அறிவித்துள்ளார். அந்த தேதிகளில் பணிக்கு வருபவர்கள் பட்டியலை துறைவாரியாக அனுப்பி வைக்கவும் ஆணை பிறப்பித்துள்ளார். மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுவதால் அரசு ஊழியர்களுக்கு இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து, மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |