அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் இவர்கள் வருகிற 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனியார் மயமாக்ககூடாது, மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்ககூடாது, முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்ககூடாது, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளனர்.
இந்த போராட்டத்தில் சுமார் 25 கோடி பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து பல அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் அவ்வாறு பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் ரத்து செய்யப்படும். மேலும் வேலைக்கு வராத ஊழியர்களின் முழு விபரங்களையும் துறைச்செயலாளர்கள் அனுப்பப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.