பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டுமென மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் குடும்ப பாதுகாப்பு நிதி ரத்து உள்ளிட்ட பாதகமான அம்சங்கள் நிறைவேற்றப்பட்டது. இது அரசு ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பல வருடங்களாக அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலுக்கு கொண்டு வரும் என்று வாக்குறுதி அளித்தது. இதுவரை பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேப்போன்று தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் செயற்குழு சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அரசுத்துறை வாகன ஓட்டுநர்கள் தங்களுடைய ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் எனவும், போக்குவரத்து ஊழியர்களுக்கு பணியில் இருக்கும் போது கட்டாயம் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.