தமிழகத்தில் நடைபெறும் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கிறதா என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தல், பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருதல் உள்ளிட்ட 12 அம்ச திட்டங்களை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 2 நாட்கள் சம்பளம் பிடிக்கப்படும் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. ஆனால் இதை மீறியும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தடுப்பதற்கு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டரில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது இந்த வேலைநிறுத்த போராட்டத்தை அரசு ஆதரிக்கிறது. இருப்பினும் ஊழியர்கள் தங்களது உரிமைக்காக போராடும் போது அவர்களின் சம்பளத்தை எதற்காக பிடிக்கிறார்கள் என்று கேட்டுள்ளார். தமிழக அரசு இந்த போராட்டத்திற்கு மறைமுகமாக மத்திய அரசிற்கு எதிர்ப்பும், நேரடியாக ஆதரவும் தெரிவித்து வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கிறதா என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.