Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. தலைமைச் செயலாளர் வெளியிட்ட இனிப்பான செய்தி….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார் அதனை ஆவின் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுத்துறை செயலாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார் ஆவின் இனிப்புகளை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆவின் நிறுவனம் நாள்தோறும் 41 ஆயிரம் லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து உள்ளூர் விற்பனை போக இருபத்தி ஒரு லட்சம் லிட்டர் பாக்கெட் பாலாக விநியோகம் செய்து வருகிறது.

மீதமுள்ளவை தயிர், நெய், வெண்ணை, லஸ்ஸி, பால் பவுடர், பால்கோவா, குலாப் ஜாமுன்,ரசகுல்லா மற்றும் மைசூர் பாக்கு உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்யப்படுகின்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு காஜி கத்லி, நட்டி மில்க் கேக், மோத்தி பாக், காஜி பிஸ்தா ரோல், காபி ஃப்ளேவர் மில்க் பருப்பி ஆகிய இனிப்புகளை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. என்று அந்த இனிப்புகளை அரசுத் துறைகளும் தங்களது ஊழியர்களுக்கு தீபாவளிக்காக இனிப்புகள் வழங்கும் பட்சத்தில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் இனிப்புகளை கொள்முதல் செய்து வழங்குமாறு வலியுறுத்தப்படுகின்றது.

Categories

Tech |