Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு செக்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!!!!

அரசு ஊழியர்கள் பதவி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகி  உள்ளது.

தமிழக சட்டப்பேரயைில், இன்றைய கேள்வி நேரத்தின் போது, கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அன்பழகன், “கருவூலத்தில் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் பணிச்சுமை அதிகரித்து காணப்படுவதாகவும், மாவட்ட சார் கரூவூல கணக்கு அலுவலத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய கணக்கும், 7 லட்சம் ஓய்வூதியதார்களுக்கும் கணக்கு வழக்கு பார்ப்பதாகவும், ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்க அரசு நடவடிக்கைகள் எடுக்க்க வேண்டுமெனவும், தமிழகம் முழுவதும் 243 அலுவலகமும் இதே நிலைநீடித்து வருகிறது. எனவே இதற்கு அரசு தீர்வு காண வேண்டும்” என கோரியுள்ளார்.

இதற்கு, நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள பதிலில்,
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு நடத்துவதில் பல பிரச்னைகள் இருக்கின்றது. நீதிமன்றம், கொரோனா என பல தேர்வுகள் தள்ளி போயிருந்ததால் தான் காலி பணியிடங்கள் அதிகரித்ததற்கு காரணமாகியிருக்கிறது. மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வது, அரசாணை அமல்படுத்தபடுவது, சான்றிதழ் சரிபார்பது போன்ற  அனைத்தையும் குழு அமைத்து ஆய்வு செய்யபட்டு வருகின்றது.

தமிழ்நாட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கினால் பணி ஆணை பெற்றதிலிருந்து ஓராண்டிற்கு பணியிடை மாறுதல் செய்ய கூடாது. மேலும் ஓரு  அரசு ஊழியர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றக் கூடாது. அங்கேயே பணியாற்றினால் அங்கு பிரச்னைகள் ஏற்படும். பணி நிமித்தமாக பதவி உயர்வு பெற்றால் அந்த அதிகாரி வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் மீது உள்ள புகாரை அவரே விசாரிக்கும் நிலை ஏற்படும். இவை எல்லாம் தமிழகத்தில் சரியாக பின்பற்றப்படுவது கிடையாது. ஆகவே இதை கலையவே மனிதவள மேம்பாடு மையம் குழு அமைத்து சீர்திருத்தம் செய்து வருகிறோம் எனவும்  விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும்  அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |