தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக அரசு பொருளாதாரத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்ட போது, அந்நிலையை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த விடுமுறை எடுக்காதவர்களுக்கு ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்குரிய சம்பளம் எவ்வித பிடிப்பும் இன்றி வழங்கப்படும் என்று கூறியதையடுத்து, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என 30 நாட்கள், அதாவது ஒரு மாத ஊதியமாகவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ள நிலையில், இதற்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தடை நீடித்தது. ஆகவே தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
இதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி கொள்ளவும் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறுவதற்கான தடை தொடரும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
எனவே இந்த தடை மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்றும், அதனால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இதனை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் இந்த கோரிக்கையினை முன்வைத்து வருகின்றனர்.