Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. பழைய ஓய்வூதிய திட்டம்…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்….!!!

தமிழக நிதி அமைச்சர் பிடி ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறுவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலுரை வழங்கியுள்ளதாவது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைப்போம் என்று கூறி வருகின்ற நிலையில், ஆனால் நிதி மேலாண்மையைப் பொறுத்தவரை இதில் சிக்கல் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு அரசு ரூ.24,000 கோடி வரை, தனி நபரைப் பொறுத்தவரை ஆண்டொன்றுக்கு ரூ.2 லட்சம் வரை அரசின் சொந்த நிதியை செலவிட்டது. இதையடுத்து 2004 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகின்ற புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்பது முழுவதும் தனிநபர் பங்களிப்பில் இருந்து வருகின்றது. இந்த நிலையில், அதில் அரசின் பங்களிப்பாக ஆண்டொன்றுக்கு ரூ.3,205 கோடி, தனி நபரை பொறுத்தவரை ரூ.50,000 என்று செலவிடப்படுகிறது.

இதையடுத்து தனி நபர் கணக்கில் இருந்து அரசுக் கணக்குக்கு ஓய்வூதியத் தொகையாக செலவை மாற்றுவதில் சட்ட சிக்கல்கள் நிலவுகிறது. இதுவரை அரசின் கடன்சுமை ரூ.6 லட்சம் கோடியாகவும், முன்னாள் நீதிபதிகள், எம்.எல்.சி.க்கள், எம்எல்ஏக்கள் அவர்களின் குடும்ப ஓய்வூதியம் உட்பட அனைத்து வகையான ஓய்வூதியத்துக்கு மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.39,000 கோடி நிதி செலவிடப்படுகிறது. ஓய்வூதிய திட்டத்தை மாற்றுவது குறித்து முதலமைச்சரும், அவை முன்னவரும் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் இருந்து வருகின்ற  புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம். இவ்வாறு  2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக திமுக வழங்கியிருந்தது. இந்நிலையில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின், அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், இவ்வாறு பேசி இருப்பது, அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |