Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு….பழைய ஓய்வூதிய திட்டம்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.  

தமிழகத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்,  திமுக, அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும் இந்தத் தேர்தலில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை  பிடித்துள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் இதுவரை, பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளதாவது, தற்போது அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் எனக் கூறியிருந்த நிலையில், தற்போது நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தற்போது அறிவித்துள்ளது, அரசு ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று, திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளதாவது,
கிராமப்புறங்களில் படிக்கும் ஏழை,எளிய மாணவர்கள் கல்வியின் தேவையை உணர்ந்து, ஆர்வத்துடன் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டு, தற்போது அதை செயல்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து அதற்கு பதில் அளித்த அமைச்சர், திமுக ஆட்சிக்கு வந்தபோது ரூ.5.75 லட்சம் கோடி நிதி பற்றாக்குறையில் இருந்த நிலையில், அதை சரி செய்யக்கூடிய முயற்சியில், தமிழக முதலமைச்சர் அதிக முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனவும்  நிதி பற்றாக்குறையை சரி செய்யப்பட்ட பின் பழைய ஓய்வூதிய திட்டமானது படிப்படியாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |