Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையில் முதலில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. அதனால் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.அதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் பலர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டுமென்ற தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கு விசாரணைக்கு பிறகு 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலை பணி விதிகளின்படி இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.

இதுகுறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் பொது சுகாதார பணியாளர்கள் பதவி உயர்வு கோரி சுடலைமாடன் மற்றும் முருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அரசு ஊழியர்கள் பதவி உயர்வை முழுமையாக கோரமுடியாது என்றும் பதவி உயர்வு சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பதவி உயர்வுகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த உத்தரவை தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |