தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு, திமுக அரசு தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படியை 17% இருந்து 31% ஆக உயர்த்தினார். இதனால் அரசு ஊழியர்களின் ஊதியமானது உயர்ந்து, தற்போது ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். இந்நிலையில், திமுக அரசின் அடுத்த வாக்குறுதி,பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதாகும். இதனால் இந்த கோரிக்கையை முன்வைத்து, அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. மேலும் இதில் பங்கேற்று பேசிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேசினார்.
இதையடுத்து இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். மேலும் தமிழ் படித்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மற்றும் எமிஸ் வலைதளத்தை கையாள தனி அலுவலர்கள் அதற்கென நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பிறகு, அமைச்சரின் வார்த்தைக்கு இணங்க, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் ஆனால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதில் எவ்வித சமரசமும் கிடையாது.எங்கள் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.