Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. முதல்வரின் முடிவு என்ன?….!!!!!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் திட்டம் இருக்கிறது. அதன்படி ஓய்வுபெற்ற பின் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தொகையும் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் பணியின்போது பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் வழங்கப்படும். இந்நிலையில் சென்ற அதிமுக ஆட்சியின் போது 2004ஆம் வருடத்திற்கு பின் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புது ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்தியது. இவற்றில் பல புதிய நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டு ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டது.

இதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்த்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் இதை வலியுறுத்தி தமிழகம் முழுபி[தும் பல போராட்டங்களும் நடைபெற்றது. இந்நிலையில் சென்ற 2021 ஆம் வருட நடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக-வினர் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்கள். இதுகுறித்து சட்டமன்ற மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய நிதி அமைச்சர் ராஜஸ்தான் அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்தியபோது ஏற்பட்ட சிக்கல்கள் பற்றி எடுத்துரைத்தார்.

அத்துடன் பழைய ஓய்வூதிய திட்டத்தில் முதல்வர் எடுக்கும் முடிவுக்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த பாணியில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்துவதில் அரசு பின் வாங்கினால் திட்டத்தை அமல்படுத்தும் வரையிலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர். இப்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கக்கூடிய முடிவே இறுதியான முடிவு என்று தெளிவாகிறது. இதனால் முதலமைச்சரின் முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |