மத்தியஅரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி மற்றும் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதேபோன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் அதிகரிப்பதன் காரணமாகவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஜூன் மற்றும் ஜூலை, டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி வழக்கமாகவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 % உயர்த்தப்படுகிறது மற்றும் அதிகபட்சமாக 6 % வரைக்கும் கூட அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் சென்ற மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில்லரை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் இந்த ஜூலை மாதத்தில் 4 % முதல் 5 % வரைக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மட்டுமின்றி, அகவிலைப்படி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்படாமலே இருக்கிறது. இதனால் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பு கூடியவிரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அகவிலைப்படி சம்பள உயர்வையும் எதிர்பார்த்து தமிழக அரசு ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.