Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. பழைய பென்ஷன் திட்டம்…. என்னென்ன சிறப்பம்சங்கள்…. இதோ முழு விபரம்….!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் கடந்த 2003-ம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டமானது ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து புதிய ஓய்வூதிய திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் உள்ள பங்களிப்பு பென்சன் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் சலுகைகள் இல்லாததால் பல வருடங்களாக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

இந்த திட்டத்தில் பொது வருங்கால வைப்பு நிதி இருப்பதால் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது. அதன் பிறகு ஓய்வூதிய காலத்தில் மாதம் தோறும் நிலையான பென்ஷன் கிடைக்கும். ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் சம்பளமானது பிடித்தம் செய்யப்பட்டு ஓய்வூதியத்திற்கு பிறகு மொத்தமாக தொகை வழங்கப்படும். இதனால் நிரந்தர வருமானத்திற்கு உத்தரவாதம் கிடையாது. இதனையடுத்து அரசு ஊழியர்கள் தேவைப்படும்போது பென்சன் தொகையிலிருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த கடனுக்கு வட்டி கிடையாது. ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் கடன் பெற்றுக் கொள்ளும் சலுகை கிடையாது.

இதைத்தொடர்ந்து ஓய்வூதியத்திற்கு பிறகு அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதவீதம் பென்சனாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி ஈடு கட்டும் ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம், இயலாமை ஓய்வூதியம், விருப்ப ஓய்வூதியம் போன்ற சலுகைகளும் கிடைக்கும். மேலும் பணி ஓய்வு கொடை, இறப்பு பணிக்கொடை, பணிக்கால பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறுதல், வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறுதல், ஊழியர் இறந்துவிட்டால் 30% குடும்ப பென்சன் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கிறது. இந்த சிறப்பு அம்சங்கள் எதுவும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை. இதன் காரணமாகத்தான் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை விரும்புகிறார்கள்.

Categories

Tech |