தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 9 மாதங்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பெண் அரசு ஊழியர்கள் குழந்தைகளை தத்தெடுத்தாலும் அந்த குழந்தைகளை பராமரிக்கவும் 270 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பெண் ஊழியர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அவர்களுக்கு 21 நாட்கள் வரை தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாநில கோரிக்கையின் போது சமூக பாதுகாப்பு இயக்குனர் அவர்கள் கூறியதாவது, பெண் அரசு ஊழியர்கள் குழந்தை தத்தெடுத்தாலும் அந்த குழந்தையை பராமரிப்பதற்கும் 270 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதிப்பது போல மாற்றுக் கருவறை தாய் வாயிலாக பெறும் குழந்தைகளை பராமரிப்பதற்கும் 270 நாள் சிறப்பு விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி இதனை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு தற்போது பெண் அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுக் கருவறை தாய் வாயிலாக பெறும் குழந்தைகளை பராமரிக்க 270 நாட்கள் சிறப்பு விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி அரசாணை வெளியிட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பான அரசாணையில் பெண் அரசு ஊழியர் மாற்று கருவறை தாய் வாயிலாக குழந்தை பெற்ற சட்டரீதியான ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். அத்துடன் அந்த குழந்தை பெறப்பட்ட மருத்துவரிடமிருந்து மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் இதனை தொடர்ந்து இந்த விடுப்பு இரண்டு குழந்தைகள் வரை மட்டுமே வழங்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது.