Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. பதவி உயர்வு விதிமுறை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு அலுவலர்கள் ஓய்வு பெற உள்ள நிலையில் செயற்கையாக காலி பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்குவது தகுதி உள்ள அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் செயற்கை காலி பணியிடங்களை உருவாக்கி செல்கின்றனர்.

எனவே இதனை தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் பதவி உயர்வு பெற வசதியாக பெயர் பட்டியலை வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். சில அலுவலர்கள் ஓய்வு பெறும் நாளில் அல்லது சில நாட்களுக்கு முன்பு செயற்கை காலி பணியிடங்களை ஏற்படுத்துதல் மற்றும் பதவி நிலை உயர்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

எனவே இனிவரும் நாட்களில் இதுபோன்ற செய்யக்கூடாது. நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வருடமும் கால தாமதம் இன்றி உரிய காலத்தில் பதவி உயர்வுக்கு தேர்ந்தெடுத்தோர் பெயர் பட்டியல் வெளியிட்டு முறையான பதவி உயர்வு வழங்க வேண்டும். இதன் மூலமாக தகுதி உள்ள அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவது தவிர்க்கப்பட வேண்டும். இதனை அனைத்து நியமன அலுவலர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |