Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்….!!!!

இன்று 75-வது சுதந்திரதின விழா இந்தியா முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புனிதஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினா். இதையடுத்து பேசிய ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசியதாவது “ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைபடியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடும் நிதிச்சுமைக்கு மத்தியிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01/07/2022 முதல் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இதன் வாயிலாக 16 லட்சம் பேர் பயனடைவர். அரசுக்கு வருடத்திற்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும்.

அத்துடன் மாநில அரசின் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தொகை இன்று முதல் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும் குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித் தோன்றல்கள், சிவகங்கை மருதுபாண்டியர் சகோதரர்களின் வழித் தோன்றல்கள், முத்துராமலிங்க விஜயர குருநாத சேதுபதியின் வழித் தோன்றல்கள், வஉ சிதம்பரனார் வழி தோன்றுகளுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக வழங்கப்படும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 வருடகால தொடர்பு பங்களிப்பு பற்றி எதிர்கால சமுதாயம் அறிந்துகொள்ளும் விதமாக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய விடுதலை நாள் அருங்காட்சியம் ஒன்று சென்னையில் விரைவில் கட்டப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Categories

Tech |