Categories
மாநில செய்திகள்

“23 நாட்கள் விடுமுறை”…. அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

வரும் 2022ஆம் ஆண்டில் சுமார் 23 நாட்களுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டு தொடங்கும் போது அந்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் அதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிடுவது வழக்கம். 2022ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 நாட்கள் வரை பொது விடுமுறை அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியல் தமிழகத்திலுள்ள அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறை பட்டியலில் வார இறுதி விடுமுறை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

  • ஆங்கிலப் புத்தாண்டு – 01.01.2022 சனிக்கிழமை
  • பொங்கல் – 14.01.2022- வெள்ளிக்கிழமை
  • திருவள்ளுவர் தினம் – 15.01.2022- சனிக்கிழமை
  • உழவர் திருநாள் – 16.01.2022- ஞாயிற்றுக்கிழமை
  • தைப்பூசம் – 18.01.2022- செவ்வாய்க்கிழமை
  • குடியரசு தினம் – 26.01.2022- புதன்கிழமை
  • வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு – 01.04.2022- வெள்ளிக்கிழமை
  • தெலுங்கு வருடப் பிறப்பு – 02.04.2022- சனிக்கிழமை
  • தமிழ் புத்தாண்டு, மகாவீரர் ஜெயந்தி, டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் – 14.04.2022- வியாழக்கிழமை
  • புனித வெள்ளி – 15.04.022- வெள்ளிக்கிழமை
  • மே தினம் – 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை
  • ரம்ஜான் – 03.05.2022- செவ்வாய்க்கிழமை
  • பக்ரீத் – 10.07.2022- ஞாயிற்றுக்கிழமை
  • மொகரம் – 09.08.2022- செவ்வாய்க்கிழமை
  • சுதந்திர தினம் – 15.08.2022- திங்கள் கிழமை
  • கிருஷ்ண ஜெயந்தி – 19.08.2022- வெள்ளிக்கிழமை
  • விநாயகர் சதுர்த்தி – 31.08.2022- புதன்கிழமை
  • காந்தி ஜெயந்தி – 02.10.2022- ஞாயிற்றுக்கிழமை
  • ஆயுத பூஜை – 04.10.2022- செவ்வாய்க்கிழமை
  • விஜயதசமி – 05.10.2022- புதன்கிழமை
  • மிலாதுன் நபி – 09.10.2022 – ஞாயிற்றுக்கிழமை
  • தீபாவளி – 24.10.2022 – திங்கள் கிழமை
  • கிறிஸ்துமஸ் – 25.12.2022 – ஞாயிற்றுக்கிழமை

Categories

Tech |