Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதற்கு முன் பணம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. அதனைப் போலவே மத்திய அரசும் தனது ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கிவரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடந்த வருடத்திலிருந்து முன் பணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதனைப் போலவே தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ஆறு லட்சம் 14 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பலரும் தற்போது மின்சார வாகனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு அரசு ஊழியர்களுக்கு முன் பணம் தர வேண்டும் என போக்குவரத்து துறை பரிந்துரைத்த நிலையில் இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு இது தொடர்பான அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு மின்சார வாகனங்கள் வாங்குவதற்கும் முன்பணம் வழங்க அனுமதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |