Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களே…. இதை நம்பாதீங்க… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழக அரசுத் துறைகளில் பெரும்பாலானோர் பணிபுரிந்து வருகின்றனர். அரசுத்துறைகளில் பணியாற்றி வருபவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் போது ஒரு செட்டில்மெண்ட் தொகை வழங்கப்படும். அவ்வாறு ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு இதுவரை பணி ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது 60 ஆக உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு வழங்கப்படும் செட்டில்மெண்ட் தொகை வழங்கும் அளவிற்கு போதிய நிதி இல்லாதது காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது விரைவில் 58 ஆக குறைக்கப்படும் என்று தகவல் வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் வருகின்ற ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் ஒரு பத்திரிக்கையின் நியூஸ் கார்டு ஒன்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த பத்திரிக்கை இணையதள பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது, இது போலியான நியூஸ் கார்டு என்று கூறியது. இதை நாங்கள் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |