Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களே…. இன்னும் ஒரே நாள் தான் இருக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளன. தொற்று அதிகரிக்கும் நிலையில் மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் 2-வது கொரோனா தொற்றுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்ததாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் பொது இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது புதிய உத்தரவாக ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், இரவு நேர பணிக்கு செல்பவர்கள் தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் 2 தடுப்பூசிகளும் அதற்கான சான்றிதழ்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் ஜனவரி 9-ஆம் தேதி அன்று தடுப்பூசி செலுத்திய சான்றிதழை தங்கள் பணிபுரியும் அலுவலகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |