மத்திய அரசு வழங்கியதைப் போன்று, தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் போன்றோர் கூறியதாவது,
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 1.1.2021 முதல் அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 % உயர்த்தி வழங்கவும், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தை பொங்கலை முன்னிட்டு போனஸ் 3 ஆயிரம் ரூபாய் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது வரவேற்கத்தக்கது.
இதில் மத்திய அரசு ஊழியர்கள் 1/7/2021 முதல் 31 % அகவிலைப்படியை ரொக்கமாக பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி மத்திய அரசு கடந்த 1/1/2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாத சம்பளத்துடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. தமிழக அரசானது அகவிலைப்படி நிலுவையை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் வழங்க வேண்டும்.
இதனிடையில் போனஸ் சட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 3 வருடங்களாக தமிழக அரசு 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது. ஆகவே தமிழக அரசு போனஸாக 7 ஆயிரம் ரூபாய் அறிவிக்க வேண்டும். மேலும் ஏ மற்றும் பி பிரிவினர், கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கும் பொங்கல் கருணைத் தொகை வழங்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர். இதுகுறித்து தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.