Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு ஊழியர்கள் இதையெல்லாம் செய்யலாம்”….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழக அரசு ஊழியர்கள் இதையெல்லாம் செய்யலாம் என்று திருத்தம் செய்த அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது பற்றி இதில் பார்ப்போம்.

பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும் பின்னும் அவசியம் இருந்தாலும் நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது.

கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி யாராவது ஒருவரின் ஜாதியின் அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவருடைய சொந்த வருமானத்தை கொண்டு சொத்து வாங்க அனுமதி இல்லை. பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டியது இல்லை.

அரசு பணியாளர்கள் நடத்தை விதிகளின்படி அரசு ஊழியர்கள் அசையா சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசு பொருள்களாக வாங்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆவணங்கள் முக்கியமானது.

மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும்.

அரசு ஊழியர் ஒருவர் பிரைவேட் ஸ்டடி பயில்வதற்கு துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும்.

மாலை நேர கல்வி பயில துணைத்தலைவரின் அனுமதி தேவை.

அரசு ஊழியர் ஒருவர் மாலை நேர கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எந்தவித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியை தொடரலாம்.

Categories

Tech |