Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்கள் பணி பயன்கள்…. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி ராஜினாமா செய்து விட்ட பிறகு அரசு பள்ளியில் ஆசிரியராக பணி நியமனம் பெற்றவரின் முந்தைய பணிப் பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து பின்னர் ராஜினாமா செய்துவிட்டு அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற தியாகராஜன், மாலதி ஆகியோர் தங்களது முந்தைய பணி பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வழக்கு தொடர்ந்தனர்.

\அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீலகண்டன், தமிழக அரசு மற்றும் துணை பணிகளுக்கான விதிகளின்படி அரசு பணியாளர் ஒருவர் தான் பணியாற்றிய பணியில் இருந்து தானே விலகினால் அந்த பனிக்காலத்தை விட்டுக் கொடுத்து விட்டதாக தான் எடுத்துக் கொள்ள முடியும் என்று தனது வாதத்தை முன் வைத்தார்.

மேலும் பனியிலிருந்து தானே விலகினால் அந்த பனிக்காலத்தை ஓய்வூதியத்திற்காக கணக்கில் ஒருபோதும் எடுத்துக்கொள்ள கூடாது என்று தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி,அரசு பணியாளர் ஒருவர் தானே விலகினால் அந்த பணியின் முந்தைய பனிக்காலத்தை பணி பயன்களுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

Categories

Tech |