Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர் குழந்தைகளுக்கு…. மருத்துவ காப்பீடு…. அரசாணை வெளியீடு….!!!!

அரசு ஊழியர்களின் குழந்தைகள் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெறும் வகையில் வயது உச்ச வரம்பை நீக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு ஊழியர்களை சார்ந்த மகன்கள், மகள்கள் ஆகியோரது வயது வரம்பினை நீக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலைகள் இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அரசு ஊழியர்களுக்கு மகன் அல்லது மகள் வேலைக்குச் செல்லாதவராகவும், உயர்க்கல்வி படிக்காதவர்களாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆகவும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள. மேலும் திருமணம் ஆகாதவர் அல்லது சட்டப்படி விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான பிரீமியம் தொகையாக கூடுதலாக அரசு ஊழிய ஜிஎஸ்டி-உடன்  20 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு 1 கோடியே 9 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |