Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஏன் தாமதம் காட்டுகிறது?… இன்னும் எத்தனை உயிர் போகணும்?…உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு தாமதம் செய்வது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் அனைத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதிகள், “ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வதற்காக சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும்? சட்டமாக இயற்றப்படுமா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு சார்பாக, சட்டப்பேரவை கூட்டப்படவில்லை என்பதால் அதற்கான நடவடிக்கையை எடுக்க முடியவில்லை. ஆன்லைன் சூதாட்டங்கள் கட்டாயம் தடை செய்யப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். அதைத் தடை செய்வதற்கு சட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது. அதன் பிறகு நீதிபதிகள், “பிரபலங்கள் பலர் ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுக்கு விளம்பரம் செய்வது வேதனை அளிக்கிறது. சினிமா நடிகர்களை பின்பற்றும் நிலை தமிழகத்தில் உண்டாகியுள்ளது. விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பல ஆன்லைன் சூதாட்டங்களால் பறிபோகின்றன. அதனால் உயிர்கள் பறிபோவதை தடுக்க அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |