Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்கல!”…. ஸ்டாலினுக்கு பறந்த ரிப்போர்ட்…. மத்திய அரசின் பகீர் குற்றச்சாட்டு….!!!!

தமிழகத்தை அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆறாயிரம் கிலோ மீட்டருக்கு ( 6000 கி.மீ) மேல் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய நெடுஞ்சாலைகளையும் மாநிலத்தில் அமைக்கும் திட்டத்தோடு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, “தமிழக அரசு இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்று பரபரப்பாக குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் அமைச்சர் வேலு மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகளுடன் அமைச்சர் நிதின் கட்கரியின் பகிரங்க குற்றச்சாட்டு குறித்து ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையின் போது தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன ? நடைமுறையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் எவ்வளவு ? அதிகாரிகள் மத்திய அரசின் சாலை பணிகளுக்கு ஒப்புதல் வழங்கவில்லையா ? என பல கேள்விகளையும் எழுப்பினார். அதன் பிறகு அந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கேள்விகளுக்கும் அதிகாரிகள் அளித்த விளக்கங்கள் ஒரு அறிக்கையாக தயார் செய்யப்பட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு ரிப்போர்ட்டாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |