Categories
தேசிய செய்திகள்

“தமிழக அரசு ஓய்வூதியதாரர்களே”… வெளியான முக்கிய தகவல்…. ஆட்சியர் உத்தரவு….!!!!!!!

தமிழக அரசுத் துறைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் அவர்களின் ஓய்வூதிய காலத்தில் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் அரசு ஓய்வூதியம் பெறுவோர் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் போன்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு வாழ்நாள் சான்று வழங்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக  கடந்த இரண்டு வருடங்களாக நேர்காணல் எதுவும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று  சற்று குறைந்து இருக்கின்ற நிலையில் நேர்காணல் நடத்த இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு நேர்காணலில் கலந்து கொள்ளாதவர்கள் நேரடியாக கருவூலத்துக்கு  வராமல் ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்திய மின் அஞ்சல் துறை வங்கி மூலமாக ஓய்வூதியதாரர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றை  பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் ஈ சேவை மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஓய்வூதியர்கள் சங்கத்தில் பயோமெட்ரிக் கருவி மூலமாக பங்கேற்றுக் கொள்ளலாம். அவ்வாறு பங்கேற்கும் போது ஆதார் கார்டியன் பி பி ஓ என், வங்கிக் கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலக விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் www.tn.gov.in./ karuvoolam/ என்னும் இணைய முகவரி மூலமாக படிவத்தை பதிவிறக்கம் செய்து அரசிதழ் பதிவு பெற்ற மாநில மத்திய அரசு அலுவல் தாசில்தார், துணை தாசில்தார் மாவட்ட வேட்பாளர் போன்றோரிடம் கையெழுத்து பெற அனுப்பலாம். வெளிநாட்டில் வசித்து வருபவர் தூதரக அலுவலர் மாஜிஸ்திரேட் நோட்டரி பப்ளிக் மூலம் சான்று பெற்று அனுப்பலாம் என கூறப்படுகிறது. மேலும் கருவூலத்திற்கு நேரடியாக வர விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிக்குள் வந்து சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |