Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கு…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…..!!!!!

தமிழகத்தில் பட்ஜெட் வருகிற மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதாவது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யும் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து வெற்றி வாகை சூடும் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, தொழில்துறையினருக்கு என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது, புதிய அறிவிப்புகள் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதால் ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொடக்க கல்வியில் கணினி அறிவியல் பாடத் திட்டத்தை அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதன்பின் அடிப்படை ஊதியத்தில் பி.எட் பயின்ற கணினி அறிவியல் ஆசிரியர்களை மாற்ற வேண்டும் என கணினி ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கை மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, கணினி அறிவியல் பாடத்திட்டத்தை அரசு பள்ளியில் அறிமுகப்படுத்தி அசத்தினார். அதனை தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சி கணினி அறிவியல் கல்வித்திட்டத்தை முடக்கி வைத்தனர். இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதிய அளவு கணினி கல்வி கிடைக்காததால் பள்ளி படிப்பை முடித்து வருகின்றனர்.

ஆகவே இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரி, மத்திய- மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அவர்களின் கோரிக்கையை அரசு புறக்கணித்து வந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அவர் இந்த விஷயத்தில் அமைதி காப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் நலன் கருதி தொடக்க கல்வியில் கணினி கல்வி அறிமுகம் செய்ய வேண்டும். இது சார்ந்துள்ள கணினி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே கோரிக்கையாகும். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு அறிவிப்பாக வெளியிட்டு, அதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |