சென்னை #PSBB பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய விமர்சனத்தையும், கண்டனத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் அரசு தரப்பில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக தெரிய வந்தால் தமிழக அரசை கலைப்பதை தவிர வேறு வழி இல்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.