Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு கல்லூரிகளில் காலி பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் கௌரவ விரிவுரையாளர்கள் அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வருடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இந்த வருடம் அனைத்து அரசு கல்லூரிகளிலும் காலியாக உள்ள 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும் அரசு மற்றும் கலை கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பும் பணியும் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |