தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களை சிறப்பிக்கும் வகையில், விளையாட்டு விருதானது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்விருது தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று பதக்கங்களை வென்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளை போலவே, நடப்பாண்டிலும் இந்த விருதுக்கான அறிவிப்பானது வெளியாகி உள்ளது. எனவே தகுதியான விளையாட்டு வீரர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பதக்கம் வென்ற தலா 2 ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் மற்றும் 2- சிறந்த பயிற்றுநர்கள், 2-சிறந்த உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் 3-ஆண்டுகளாக வசித்து வருகின்ற நபர்,தமிழ்நாடு அணியின் சாா்பாக 2-முறை கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள், மாநில விளையாட்டு விருது பெற தகுதியானவர்கள். ஆகவே விருதிற்கு விண்ணப்பிக்க குறைந்தது 5-ஆண்டுகளாக, தமிழகத்தில் வசித்து வருகின்ற முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் தகுதி பெறுவா்.
மேலும் இவ்விருதிற்கு முந்தைய 3-ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை கருத்தில் கொண்டு, தேர்வு செய்யப்படுவார்கள். எனவே இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த விண்ணப்ப படிவத்தை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று குறிப்பிட வேண்டும். இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை, வருகிற ஜூன் 10 -ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு, உறுப்பினர் செயலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை – 600003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.