தமிழக அரசு சார்பாக அகரமுதலி திட்ட இயக்ககம் நடத்தும் போட்டியில் வெற்றி பெற்றால் 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பாக ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அதில் மரபுக் கவிதை படைக்கும் ஒருவருக்கும், புது கவிதை படைக்கும் ஒருவருக்கும் “நற்றமிழ் பாவலர்” என்ற விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான பரிசுத் தொகை 50,000. அந்த விருதுக்கான விண்ணப்பத்தை www.sorkuvai.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.