Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டும்…. மே 17 இயக்கம் வேண்டுகோள்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம்  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் ஒரு நாளைக்கு 1,20,000தடுப்பூசிகள் உற்பத்தி செய்யமுடியும் என்று கூறிய மே 17 இயக்கம், அதை மத்திய அரசு திறக்க மறுக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. தமிழக அரசே எடுத்து நடத்த போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் கூறியுள்ளது. முடியாத பட்சத்தில் தென்னிந்திய மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இதை திறக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Categories

Tech |