Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு, தனியார் பேருந்துகளில்… அரசு மகிழ்ச்சி உத்தரவு…!!!

தமிழகத்தில் இனி அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவீத இருக்கைகளில் பயணிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பேருந்து சேவை 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்பட்டு தொடங்கியது. இதனையடுத்து தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், தொழிற்சாலைகள்,பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா  காரணமாக 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 100 சதவீத இருக்கைகளில் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் தேவைக்கேற்ப பேருந்து சேவைகளை அதிகரிக்கவும் அரசு போக்குவரத்துகழகத்திற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |