Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர், தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் வழங்க வேண்டும். கல்வித் துறை அதிகாரிகள் அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியார் பள்ளிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிகளில் மீண்டும் சேர்த்து இடைநீற்றல் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுதொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. அதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |